/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடுரோட்டில் கால்நடைகள் உலாவிபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
/
நடுரோட்டில் கால்நடைகள் உலாவிபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
நடுரோட்டில் கால்நடைகள் உலாவிபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
நடுரோட்டில் கால்நடைகள் உலாவிபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 14, 2024 05:39 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரோட்டில் ஆடு, மாடு, கோவேறு கழுதைகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் நகர், புறநகர், பட்டணம்காத்தான், சக்கரகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை- ராமநாதபுரம் ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து உள்ளது. இந்த ரோடுகளில் தினமும் மாடு, மட்டக்குதிரைகள், கோவேறு கழுதைகள் சுற்றித்திரிகின்றன.
இவை நடு ரோட்டில் படுத்து ஓய்வு எடுப்பதால் விபத்துக்கள் நடக்கிறது. இதில் கால்நடைகள், வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளதால் கால்நடைகளை வீட்டில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும்.
ரோட்டில் மேய்ச்சலுக்கு விடும் உரிமையாளர்கள் மீது சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.