/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டோரங்களில் குப்பை எரிப்பு புகையால் வாகன ஓட்டிகள் அவதி
/
ரோட்டோரங்களில் குப்பை எரிப்பு புகையால் வாகன ஓட்டிகள் அவதி
ரோட்டோரங்களில் குப்பை எரிப்பு புகையால் வாகன ஓட்டிகள் அவதி
ரோட்டோரங்களில் குப்பை எரிப்பு புகையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 28, 2025 05:43 AM
திருவாடானை : மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பையை எரிப்பதால் ஏற்படும் புகையால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானையில் இருந்து தொண்டி செல்லும் வழியில் தினையத்துார், அச்சங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோட்டோரம் குப்பையை குவித்து எரிக்கப்படுகிறது. அப்படி எரிக்கப்படும் குப்பையால் ரோடு முழுதும் புகை மூட்டம் சூழ்ந்து முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் கண் எரிச்சலுடன் அப்பகுதியை சிரமத்துடன் கடந்து வருகின்றனர். மேலும் அப்பகுதி முழுதும் எரியூட்டப்படும் புகையில் உள்ள மாசு துகள்கள் சுவாசிக்கும் காற்றில் கலந்து அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சுவாச பிரச்னை ஏற்பட வழி வகுக்கிறது.
எனவே குப்பையை எரிப்பதை தடுக்க சம்பந்தபட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.