/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயணிகள் நிழற்குடை கட்டுவது மட்டுமே எம்.பி., பணி அல்ல
/
பயணிகள் நிழற்குடை கட்டுவது மட்டுமே எம்.பி., பணி அல்ல
பயணிகள் நிழற்குடை கட்டுவது மட்டுமே எம்.பி., பணி அல்ல
பயணிகள் நிழற்குடை கட்டுவது மட்டுமே எம்.பி., பணி அல்ல
ADDED : பிப் 28, 2024 05:36 AM
முதுகுளத்துார், : முதுகுளத்துாரில் நடந்த எஸ்.டி.பி.ஐ., கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில், 'பயணிகள் நிழற்குடை கட்டுவது மட்டுமே எம்.பி.,யின் பணி அல்ல,' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட தலைவர் நுாரூல் அமீன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சுபீர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதி புதிய மாற்றத்திற்கு தயார் என்ற நிலையில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி., நவாஸ்கனி அலங்கார வேலைகளைத் தாண்டி தன்னுடைய பொறுப்புக்கேற்ற எந்த பணிகளையும் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் செய்யவில்லை.
திருமண வீடுகளுக்கு செல்வதும், அரசு விழாக்களில் கலந்து கொள்வதும், பயணிகள் நிழற்குடை கட்டுவது மட்டுமே லோக்சபா உறுப்பினரின் பணி அல்ல.
மாறாக மக்கள் நலனுக்கான நல்ல பல திட்டங்களை கொண்டு வருவதும், மக்கள் நலனுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக களமாடுவதும், பார்லிமென்ட் இரு அவைகளில் மக்களுக்காக குரல் எழுப்புவதுமே தலையாய பணி.
தொகுதியில் இதுபோன்ற பணிகள் பரவலாக நடைபெறாத சூழ்நிலை உள்ளது.
எனவே புதிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் எஸ்.டி.பி.ஐ., கட்சி தனித்தோ அல்லது கூட்டணியில் போட்டியிடவும், பார்லிமென்ட் தேர்தல் களப்பணிகளுக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட துணைத்தலைவர் மீரான் முஹைதீன் மன்பஈ, மாவட்ட செயலாளர்கள் காஜா முஹைதீன், செய்யது இப்ராஹிம் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

