/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எம்.ஆர்.பி., செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
/
எம்.ஆர்.பி., செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
எம்.ஆர்.பி., செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
எம்.ஆர்.பி., செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 13, 2024 12:48 AM

ராமநாதபுரம், - ராமநாதபுரத்தில் அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் எம்.ஆர்.பி., செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் சோமசுந்தர் தலைமை வகித்தார். சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயக்குமார் முன்னிலை வகித்தார்.
செவிலியர்கள் சங்க பொறுப்பாளர்கள் சத்தியபிரபா, விஜயலட்சுமி, ஊரக வளர்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத்தலைவர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியகிரி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிரந்தர செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தி விருப்ப மாறுதல் வழங்க வேண்டும்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநகரகத்தின் கீழ் பணிபுரியும் செவிலியர்கள், டாக்டர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
எம்.ஆர்.பி., ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.---------

