/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைக்கு சேறும் சகதியுமான ரோடு: காக்கூர் மக்கள் அவதி
/
மழைக்கு சேறும் சகதியுமான ரோடு: காக்கூர் மக்கள் அவதி
மழைக்கு சேறும் சகதியுமான ரோடு: காக்கூர் மக்கள் அவதி
மழைக்கு சேறும் சகதியுமான ரோடு: காக்கூர் மக்கள் அவதி
ADDED : அக் 19, 2024 04:35 AM

முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே காக்கூர் இந்திரா நகர் காலனியில் மழை பெய்தால் ரோடு சேறும் சகதியுமாக மாறி நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.
காக்கூர் இந்திரா நகர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கே தார் ரோடு வசதி இல்லை. மழைப்பெய்தால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். தற்போது சேறும் சகதியுமாக நடப்பதற்கே பயனற்ற ரோடாக மாறியுள்ளது. மாணவர்கள், முதியவர்கள் நடந்து செல்ல முடியாமல் விழுந்து சிறுசிறு காயங்கள் ஏற்படுகிறது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் வீட்டிலிருந்து வெளியில் வருவதற்கு முகம்சுழிக்கின்றனர்.
எனவே சகதிகளை சுத்தம் செய்து புதிதாக ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.