/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார்: காவிரி குழாய் உடைப்பால் குடிநீர் வீண்
/
முதுகுளத்துார்: காவிரி குழாய் உடைப்பால் குடிநீர் வீண்
முதுகுளத்துார்: காவிரி குழாய் உடைப்பால் குடிநீர் வீண்
முதுகுளத்துார்: காவிரி குழாய் உடைப்பால் குடிநீர் வீண்
ADDED : பிப் 29, 2024 10:23 PM
முதுகுளத்துார், - முதுகுளத்துார்--பரமக்குடி ரோட்டோர மெயின் குழாய் மூலம் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. முதுகுளத்துார்--பரமக்குடி சாலை ஒன்றிய அலுவலகம், எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே காவிரி மெயின் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. முதுகுளத்துார் பகுதியில் காவிரி குடிநீர் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம், எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே குடிநீர் வீணாகிறது.
எனவே அதிகாரிகள் அடிக்கடி ஏற்படும் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை நிரந்தரமாக சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.