/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமங்கள் தோறும் 'சிசிடிவி' கேமரா முதுகுளத்துார் டி.எஸ்.பி., வலியுறுத்தல்
/
கிராமங்கள் தோறும் 'சிசிடிவி' கேமரா முதுகுளத்துார் டி.எஸ்.பி., வலியுறுத்தல்
கிராமங்கள் தோறும் 'சிசிடிவி' கேமரா முதுகுளத்துார் டி.எஸ்.பி., வலியுறுத்தல்
கிராமங்கள் தோறும் 'சிசிடிவி' கேமரா முதுகுளத்துார் டி.எஸ்.பி., வலியுறுத்தல்
ADDED : மார் 20, 2025 06:56 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷனில் முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி.,சண்முகம் தலைமை வகித்தார்.இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, எஸ்.ஐ., சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
அப்போது முதுகுளத்துார் ஸ்டேஷனுக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிராமத் தலைவர், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கிராம மக்கள் சார்பில் முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுவதால் நிரந்தரமாக கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தினர்.
முதுகுளத்துார் புறவழிச்சாலை பகுதியில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.
இதையடுத்து டி.எஸ்.பி., சண்முகம் பேசுகையில், முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்கள் தோறும் சி.சி.டி.வி., கேமரா அமைக்க வேண்டும். இதன் மூலம் வெளியூரிலிருந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச்செல்வர்களை பிடிக்க முடியும்.
கிராமத்தில் எந்த தகவலாக இருந்தாலும் போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று டி.எஸ்.பி., சண்முகம் கூறினார்.மேலும் பல்வேறு ஆலோசனைகள் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. உடன் போலீசார், கிராம மக்கள் பங்கேற்றனர்.