மாநில செஸ் போட்டிக்கு முதுகுளத்துார் மாணவர் தேர்வு
மாநில செஸ் போட்டிக்கு முதுகுளத்துார் மாணவர் தேர்வு
ADDED : செப் 01, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜாவியத்துல் மஜீத் 17, மாநில அளவிலான செஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான செஸ் போட்டி வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. 11 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து செஸ் போட்டியில் முதலிடம் பெற்ற வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 17 வயது பிரிவில் ஜாவியத்துல் மஜீத் இரண்டாம் இடம் பெற்றார். மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர் ஜாவியத்துல் மஜீத், உடற்கல்வி ஆசிரியர்கள் கமால்பாட்சா, முகமது உசேன், தமிமுன் அன்சாரி ஆகியோரை தாளாளர் ஜஹாங்கீர், கல்விக் குழு தலைவர் காஜா நஜ்முதீன், தலைமையாசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி,ஆசிரியர்கள்,மாணவர்கள் பாராட்டினர்.
