/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் குறு வட்டார விளையாட்டுப் போட்டிகள்
/
முதுகுளத்துார் குறு வட்டார விளையாட்டுப் போட்டிகள்
ADDED : ஜூலை 12, 2025 11:38 PM

கீழக்கரை: ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகுளத்துார் குறு வட்டார அளவிலான பீச் வாலிபால் போட்டி நடந்தது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பாண்டிற்கான குழு வட்டார விளையாட்டுப் போட்டியில் பீச் வாலிபால் பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஏராளமான பள்ளி அணி வீரர்கள் மோதினர். தலைமையாசிரியர் செல்லதுரை தலைமை வகித்தார்.
சாயல்குடி தொழிலதிபர் சன் ஜெயராமன் முன்னிலை வகித்தார். சாயல்குடி அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜ் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
அ.தி.மு.க., நிர்வாகி பிரவீன் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். எஸ்.தரைக்குடி உடற்கல்வி ஆசிரியர் அந்தோணி இளவரசன் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தார்.