/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புது மாயாகுளத்தில் முளைப்பாரி விழா
/
புது மாயாகுளத்தில் முளைப்பாரி விழா
ADDED : அக் 10, 2024 05:43 AM

கீழக்கரை, : கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சியில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட புது மாயாகுளத்தில் உள்ள வாழ வந்தாள் மாரியம்மன் கோயிலில் 75ம் ஆண்டு முளைப்பாரி விழா நடந்தது.
நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு முளைப்பாரி ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை உள்ளிட்டவைகளை எடுத்து நேர்த்திக்கடன் பக்தர்கள் செலுத்தினர். நேற்று மலர் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூலவர் வாழவந்தாள் மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஏராளமானோர் முளைப்பாரி சுமந்து கிழக்கு மங்களேஸ்வரி நகர் கடலில் கங்கை சேர்த்தனர்.
ஏற்பாடுகளை நாடார் உறவின்முறையின் தலைவர் கனகசபாபதி, செயலாளர் சந்திரன், பொருளாளர் முருகானந்தம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.