/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி பகுதியில் முளைப்பாரி விழா
/
பரமக்குடி பகுதியில் முளைப்பாரி விழா
ADDED : செப் 27, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி சுற்றுவட்டாரப் பகுதி அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா நடக்கிறது.
பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் முளைப்பாரி விழாவையொட்டி முத்து பரத்துதல் நடந்தது. தொடர்ந்து கோயில் முன்பு தினந்தோறும் ஆண்கள், பெண்கள் கும்மி மற்றும் ஒயிலாட்டம் ஆடி வருகின்றனர். பரமக்குடி அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் பாரிகள் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிக மழை பெய்து மகசூல் கிடைக்க இறைவனை வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்தனர்.