ADDED : பிப் 27, 2026 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே திருவரை கிராமத்தில் செல்வ விநாயகர், முத்துகாளியம்மன், தர்மமுனீஸ் வரர் கோயில் மாசிக்களரி விழா நடந்தது.
இதனை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். முத்து காளியம்மன், தர்ம முனீஸ்வரர், விநாய கருக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி துாக்கி பெண்கள் முக்கிய வீதியில் ஊர்வலமாக சென்று தண்ணீரில் கரைத்தனர். விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

