ADDED : மே 16, 2026 06:07 AM

அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே அகத்தாரிருப்பு கிராமத்தில் வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும்,பெண்கள் கும்மி அடித்தும் வந்தனர். பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தும், பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி துாக்கி சென்று ஊருணியில் கரைத்தனர்.
