ADDED : செப் 15, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே அபிராமத்தில் நவசக்தி விநாயகர் கோயில் 34ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது.
ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டி விரதம் இருந்தனர். தினந்தோறும் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியாக விநாயகருக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
பின் கோயில் முளைக்கொட்டு திண்ணையில் முளைப்பாரி வைத்து ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மியடித்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் சிலையை வைத்தும் பெண்கள் முளைப்பாரி துாக்கி அபிராமம் சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். பின் முளைப்பாரியை தண்ணீரில் கரைத்தனர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.
