ADDED : செப் 23, 2026 04:32 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் நகர் முக்குலத்தோர் முன்னேற்ற சங்கம் சார்பில் செல்லி அம்மன் கோயில் 9ம் ஆண்டு பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மி அடித்தும் வந்தனர். முருகன் கோயிலில் இருந்து பூத்தட்டு ஊர்வலமாக துாக்கி சென்றனர்.
பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் முளைப்பாரி எடுத்து பஜார், அய்யனார் கோயில், செல்லிஅம்மன் கோயில் உட்பட முக்கிய வீதியில் ஊர்வலமாக சென்று தண்ணீரில் கரைத்தனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை நகர் முக்குலத்தோர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள் செய்தனர்.
