UPDATED : அக் 07, 2026 06:34 PM
ADDED : அக் 07, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் காந்திநகர் கிராமத்தில் தங்க முத்துமாரியம்மன் கோயில் 4ம் ஆண்டு முளைப்பாரி விழா நடந்தது.
வழிவிடு முருகன் கோயிலில் இருந்து பஜார் உட்பட முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் பால்குடம் அக்கினி சட்டி, வேல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம்,தீபாராதனை நடந்தது. முளைக்கொட்டு திண்ணையில் சக்தி கிரகம் முளைப்பாரி துாக்கி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று தண்ணீரில் கரைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது, கலைநிகழ்ச்சி நடந்தது.
