ADDED : அக் 03, 2024 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை: உத்திரகோசமங்கையில் தெற்கு தெருவில் உள்ள மங்கை மாகாளியம்மன் கோயிலில் நேற்று முளைப்பாரி உற்ஸவம் நடந்தது.
மாலை முளைக்கொட்டு அம்மன் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் பாரியை சுமந்து ஊர்வலமாக சென்று வராகி அம்மன் கோயில் முன்புறம் இறக்கி வைத்து பெண்கள் கும்மி கொட்டினர்.
ஆண்கள் ஒயிலாட்டம் ஆடினர். மூலவர்கள் மங்கை மாகாளியம்மன், வராகி அம்மனுக்கு அபிஷேக அலங்கார தீபராதனைகள் நிறைவேற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு கோயில் அருகே உள்ள சீதைப்புனல் ஊருணியில் பாரி கங்கையில் சேர்க்கப்பட்டது.