/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவரை முத்துகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்
/
திருவரை முத்துகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்
திருவரை முத்துகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்
திருவரை முத்துகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்
ADDED : மார் 17, 2024 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருநாழி : பெருநாழி அருகே திருவரை கிராமத்தில் உள்ள முத்துக்காளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. மார்ச் 8ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
தினமும் மூலவர் முத்துகாளியம்மன், செல்வ விநாயகர், தர்மமுனீஸ்வரர், வால்முனிஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது.
நேற்று முன்தினம் பக்தர்களால் பால்குடம், அலகு குத்துதல், கரும்பாலை தொட்டில், ஆயிரம் கண் பானை எடுத்து நேர்த்திகடனை நிறைவேற்றினர். விழாவின் நிறைவாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.