/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை அரியசுவாமி கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா
/
கீழக்கரை அரியசுவாமி கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா
கீழக்கரை அரியசுவாமி கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா
கீழக்கரை அரியசுவாமி கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா
ADDED : செப் 15, 2025 05:39 AM

கீழக்கரை : கீழக்கரை வாணிய செட்டியார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அரிய சுவாமி கோயிலில் 59வது ஆண்டு உற்ஸவம், சமயபுரம் மாரியம்மன் முளைக்கொட்டு விழா நடந்தது.
செப்., 5ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. செப்.,12ல் கீழக்கரை தட்டான் தோப்பு தெரு ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் இருந்து நேர்த்திக்கடன் பக்தர்கள் பால்குடம், மயில் காவடி, அக்னி காவடி, அலகு குத்தி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.
பின்னர் மாலை அம்மன் சக்தி கரகம் முன்னே செல்ல முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. செப்.,13ல் கோயில் முன்புறம் வளர்க்கப்பட்ட அக்னி குண்டத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். மூலவர்கள் அரிய சுவாமி, சமயபுரம் மாரியம்மன், விநாயகர், முருகன், வீரமாகாளி, முத்து இருளாயி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
மாலையில் சக்தி கரகம் முன்னே செல்ல முளைப்பாரி ஊர்வலமாக சென்று 21 குச்சு கடற்கரையில் பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.