/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொக்கனாரேந்தலில் முளைப்பாரி உற்ஸவம்
/
பொக்கனாரேந்தலில் முளைப்பாரி உற்ஸவம்
ADDED : ஆக 13, 2025 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள இடர் நீக்கிய அம்மன், புல்லாணி மாரியம்மன், மந்தை மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள மந்தை மாரியம்மன் கோயிலில் இருந்து அம்மன் சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்தவாறு ஊர்வலமாக வந்தனர்.
முன்னதாக கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர்.
நேற்று மாலை முளைப்பாரி ஊருணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.