நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆய்ங்குடியில் ஜெகமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா நடைபெற்றது. வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் கோயி லில் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் குளத்து நீரில் கரைத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினர்.
தொடர்ந்து மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் பெண்கள் கும்மியாட்டமாடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.