/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் முளைப்பாரி ஊர்வலம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED : ஜூலை 30, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் விழா ஜூலை 21ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய விழாவான பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
நேற்று வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை கோயிலில் வைத்து வழிபாடு செய்த பக்தர்கள் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று பூவாணிப்பேட்டை கூ.கூ.விநாயகர் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து சென்ற பெண்கள் அரசூருணி குளத்தில் முளைப்பாரிகளை கரைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முன்னதாக, பெண்கள் முளைப்பாரிகளை வைத்து கும்மியாட்டம் ஆடினர்.

