ADDED : அக் 09, 2025 11:07 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடை மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா நடைபெற்றது. முன்னதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பக்தர்கள் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட முளைப்பாரிகள் குளத்து நீரில் கரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து கரகம் எடுத்தும், பொங்கலிட்டும் பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.
