/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடி தர்காவை வலம் வந்த முளைப்பாரி
/
ஏர்வாடி தர்காவை வலம் வந்த முளைப்பாரி
ADDED : ஆக 08, 2025 03:03 AM
கீழக்கரை: ஏர்வாடி வாழவந்தாள் அம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழாவில் ஏர்வாடி தர்காவை வலம் வந்தது.
திருவிழா பத்து நாட் களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மூலவர் வாழவந்தாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மாலையில் ஏராளமான பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக ஏர்வாடி வெட்டன்மனை பிள்ளையார் கோயில் வழியாக வந்தனர்.
பின் ஏர்வாடி தர்கா உள்ளே 3 முறை முளைப்பாரி ஊர்வலம் வலம் வந்தது. பின்னர் பாரிகள் வரிசையாக வைக்கப்பட்டு கும்மி கொட்டப்பட்டது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை சார்பில் முளைப்பாரி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோயில் நிர்வாகி களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. உலக நன்மைக்கான சிறப்பு பாத்தியா ஓதப்பட்டது. சின்ன ஏர்வாடியில் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர். நிறைவாக சின்ன ஏர்வாடி கடற்கரையில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடு களை ஏர்வாடி யாதவர் சங்க நிர்வாகிகள், வாழ வந்தாள் அம்மன் கோயில் நிர் வாகத்தினர் செய்திருந்தனர்.