/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒரே நாளில் பல முறை மின்தடை: மக்கள் அவதி
/
ஒரே நாளில் பல முறை மின்தடை: மக்கள் அவதி
ADDED : ஏப் 12, 2025 05:31 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் நேற்று மதியம் முதல் மாலை வரை 10 முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை என தொடர்ந்து பல முறை மின்தடை ஏற்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பசலனத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணி என்ற பெயரில் நகர், கிராமப்புறங்களில் தினமும் பலமுறை மின்தடை ஏற்படுத்துவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், பட்டறைகள், ஓர்க் க்ஷாப், கம்ப்யூட்டர் சென்டர் உள்ளிட்ட தனியார் நிறுவனத்தினர், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைவரும் சிரமப்படுகின்றனர்.
தற்போது மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் மின்தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ராமநாதபும் டவுன் 2, 3ம் எண் பீடரில் காற்றில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றி பழுது பார்க்கும் பணியால் அரை மணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. மற்றப்படி அனைத்து பகுதிகளிலும் சீரான மின்விநியோகம் வழங்கப்படுகிறது என்றனர்.