ADDED : ஏப் 24, 2026 06:55 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நகராட்சி பூங்கா பயன்பாடில்லாமல் பூட்டியுள்ளதால் சிறுவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் அம்மா உணவகம் அருகே எம். எஸ்.கே., பூங்கா உள்ளது. இது பயன்பாடில்லாமல் பல ஆண்டுகளாக பூட்டியுள்ளது. மேலும் அருகே மதுபானக் கடை உள்ளது. இதனால் பூங்கா வளாகத்தை மினி பாராக சிலர் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் மது அருந்துவோர் மீது நகராட்சி நிர்வாகம், போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.-------------
