/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கள்ளக்காதல் தகராறில் கொலை டிரைவர் கைது
/
கள்ளக்காதல் தகராறில் கொலை டிரைவர் கைது
ADDED : நவ 04, 2024 03:52 AM
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் கள்ளக்காதல் தகராறில் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் டிரைவர் கெய்வின்ராஜ் 19, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பரமக்குடி தியேட்டர் பகுதியை சேர்ந்த முத்துகுமார் 29, சரவணன் 29. நவ.,1ல் நம்புதாளையில் சரவணன் உட்பட 6 பேர் கும்பல் கார், டூவீலர்களில் சென்று முத்துகுமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். தடுக்க வந்த அவரது தாய் சுசீலாவையும் வெட்டினர். போலீசார் சரவணனை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் தனது அக்காவின் வாழ்க்கையை நாசமாக்கியதால் கூலிஆட்கள் உதவியுடன் முத்துகுமாரை கொலை செய்ததாக கூறினார். கொலை நடந்த இடத்திற்கு கார் ஓட்டிச்சென்ற திருவாடானை சமத்துவபுரத்தை சேர்ந்த டிரைவர் கெய்வின்ராஜ் 19, கைது செய்யபட்டார்.
ஐந்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.