/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி உதவ வேண்டும் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கோரிக்கை
/
பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி உதவ வேண்டும் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கோரிக்கை
பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி உதவ வேண்டும் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கோரிக்கை
பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி உதவ வேண்டும் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கோரிக்கை
ADDED : ஏப் 24, 2025 06:54 AM
பெரியபட்டினம்: -சுற்றுலாத்தலமான பஹல்காமில் நேற்று முன்தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் இயக்கத்தினர் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநில ஒருங்கிணைப்பாளர் ரைசுதீன் கூறியதாவது:
காஷ்மீர் மாநில சுற்றுலாத்தலமான பஹல்காமில் நேற்று முன்தினம் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இது காஷ்மீருக்கு எதிரானது. இஸ்லாத்திற்கு எதிரானது.
மேலும் அனைத்து மனித குலத்திற்கும் எதிரான குற்றம்.
இதுவரை 28 அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சோகம்.
எந்த மதமோ எந்த மார்க்கமோ சித்தாந்தமோ இந்த கொடுமையை நியாயப்படுத்த முடியாது. காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு அங்கு தொழில் செழித்து சுற்றுலாத்துறை வளர்ந்து வந்தது.
மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து வந்தது. இதை சீர்குலைக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய ராணுவமும் மத்திய அரசும் உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன்.
தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா சென்ற மக்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆகவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு நமது பேரிடர் மீட்பு குழுவை அங்கு அனுப்பி மருத்துவ உதவிகள் செய்யவும், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக தமிழகம் கொண்டு வரவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

