ADDED : ஜன 27, 2026 05:24 AM

அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.
கோயிலில் நேற்று முன்தினம் காலை நவதுர்கா மகா யாகம் நிறைவடைந்து அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இரவு 7:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம், புஷ்ப அர்ச்சனை நடந்தது.
மூலவர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, தங்க கவசம் சாற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
