ADDED : ஆக 28, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி சல்லித்தோப்பு முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. காலை விநாயகர் பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு கடம் புறப்பாடு நடந்தது. மூலவர் முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சல்லித்தோப்பு கிராம மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
