/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முத்துப்பேட்டை அந்தோணியார் சர்ச் விழா
/
முத்துப்பேட்டை அந்தோணியார் சர்ச் விழா
ADDED : ஜன 18, 2025 06:48 AM
பெரியபட்டினம், : பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டையில் பழமை வாய்ந்த புனித வனத்து அந்தோணியார் சர்ச் உள்ளது. ஜன.8ல் சிறப்பு திருப்பலியுடன் விழா துவங்கியது.
தொடர்ந்து ஒன்பது நாட்களும் மாலை 5:30 மணி முதல் இரவு வரை பைபிளில் இருந்து மறையுரை சிந்தனைகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
மதுரை, சிவகங்கை, தங்கச்சிமடம், ராமநாதபுரம், கருமாத்துார், பாம்பன், ராஜகம்பீரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த பாதிரியார்கள் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர்.
நேற்று முன்தினம் மாலை புனித வனத்து அந்தோணியார் சொரூபம் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டு தேர் பவனி நடந்தது. நேற்று காலை பிரார்த்தனை நடந்தது. பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை முத்துப்பேட்டை பாதிரியார் சவரிமுத்து மற்றும் பங்கு இறைமக்கள், பங்கு பேரவையினர் செய்திருந்தனர்.