/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் ஏட்டு மர்ம மரணம்; அழுகிய நிலையில் உடல் மீட்பு
/
ராமநாதபுரம் ஏட்டு மர்ம மரணம்; அழுகிய நிலையில் உடல் மீட்பு
ராமநாதபுரம் ஏட்டு மர்ம மரணம்; அழுகிய நிலையில் உடல் மீட்பு
ராமநாதபுரம் ஏட்டு மர்ம மரணம்; அழுகிய நிலையில் உடல் மீட்பு
ADDED : பிப் 10, 2025 12:24 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் மீனாட்சி நகரில் பூட்டிய வீட்டிற்குள் ஏட்டு முரளிசெல்வத்தின் 42, அழுகி கிடந்த உடலை மீட்ட போலீசார் இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி கொடிக்குளம் வீரகுலசேகரபாண்டியன் மகன் முரளிசெல்வம் 42. இவர் 2003 ல் போலீசில் பணியில் சேர்ந்த நிலையில் ராமநாதபுரம் பஜார் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். பட்டணம்காத்தான் மீனாட்சி நகரில் மனைவியை பிரிந்து தனியாக வசித்தார். மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பு எடுத்தார்.
இந்நிலையில் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் பின் பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது முரளி செல்வம் உயிரிழந்து உடல் அழுகிய நிலையில் கிடந்தார்.
அதனை மீட்ட கேணிக்கரை போலீசார் ஏட்டு இறந்தது எப்படி என விசாரிக்கின்றனர்.