ADDED : ஏப் 03, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் மனைவி வீரம்மாள் 75. குழந்தை இல்லை. சிங்காரத்திற்கு இரு மனைவிகள்.
இதில் வீரம்மாள் முதல் மனைவி. வள்ளி இரண்டாவது மனைவி. சிங்காரம் இறந்து விட்டதால் வீரம்மாள், அவரது தங்கை பரிமளத்துடன் வாழ்ந்து வந்தார்.
நேற்று முன்தினம் வீரம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்ற போது இரண்டாவது மனைவி வள்ளியின் மகன் சின்னத்தம்பி போலீசில் புகார் செய்தார்.
அதில் வீரம்மாள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

