/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓரியூர் கோயிலில் புராண ஆராய்ச்சி மைய குழுவினர்
/
ஓரியூர் கோயிலில் புராண ஆராய்ச்சி மைய குழுவினர்
ADDED : டிச 08, 2025 06:50 AM

திருவாடானை: மதுரையில் உள்ள திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் புராண சுற்றுலாவில் 250 பேர் கலந்து கொண்டு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் ஆண்டுதோறும் புராண சுற்றுலா நடைபெற்று வருகிறது. நேற்று இம்மையத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் 250 பேர் 5 பஸ்களில் புராண சுற்றுலா சென்றனர்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில், ஓரியூர் சேயுமானவர் மட்டுவார் குழலி கோயில், காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ஆகிய கோயில்களுக்கு ஆன்மிக புராண சுற்றுலா சென்றனர்.
ஒவ்வொரு கோயில்களிலும் அக்கோயில் ஸ்தல வரலாறுகளை கேட்டறிந்தனர். ஓரியூர் சேயுமானவர் கோயிலில் ராமேஸ்வரம் ராமகிருஷ்ண தபோவனம் துணைத்தலைவர் சுவாமி நியமானந்தமகராஜ் பேசினார்.
அவர் பேசுகையில், ஹிந்து கோயில்கள் அறிவியல் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பாரம்பரியமான இக்கோயில்களை மீட்பது அவசியம். கோயில்களின் பாரம்பரியத்தையும், தெய்வீக ஆற்றலையும் பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்.
ஓரியூர் சிவன் கோயில் லதா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

