ADDED : அக் 28, 2025 03:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பல்வேறு கோயில்களில் நாக பஞ்சமி விழா நடந்தது. தீபாவளி பண்டிகைக்கு அடுத்து ஐந்தாவது நாள் நாகபஞ்சமி விழா வருகிறது.
அப்போது பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உற்ஸவர் சேஷ வாகனத்தில் அருள் பாலித்தார். எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர்.

