/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் கடைகளில் பொருள் வாங்காதவர்கள் பெயர் நீக்கம்: விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலை
/
ரேஷன் கடைகளில் பொருள் வாங்காதவர்கள் பெயர் நீக்கம்: விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலை
ரேஷன் கடைகளில் பொருள் வாங்காதவர்கள் பெயர் நீக்கம்: விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலை
ரேஷன் கடைகளில் பொருள் வாங்காதவர்கள் பெயர் நீக்கம்: விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலை
ADDED : அக் 31, 2025 12:20 AM
திருப்புல்லாணி:  திருப்புல்லாணி ஒன்றிய கிராமங்களில் ரேஷன் கடைகளில் ஒரு மாதத்திற்குள் பொருள் வாங்காத கார்டுகளில் குடும்பத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களின் பெயர்களை நீக்கும் தொடர் நிகழ்வால் நுாற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராம்கோ மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மகளிர் குழுக்களால் இயங்கக்கூடிய ரேஷன் கடைகள் தினைக்குளம், களிமண்குண்டு, மேதலோடை, வண்ணாங்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் ரேஷன் பொருட்கள் வாங்காத குடும்பத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களை நீக்கும் செயலால் பெரு வாரியான விவசாயிகள், மீனவர்கள் தங்களுக்கான மானியம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் பெற முடியாமல் சிரமத்தை சந்திக்கின்றனர்.
தினைக்குளத்தைச் சேர்ந்த நாகராஜன் கூறியதாவது:
ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களின் பெயரை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீக்கும் செயலால் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இதுகுறித்து கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு சென்று பெயர்களை சேர்ப்பது குறித்து விண்ணப்பித்திருந்தாலும் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கியதாகவே வருகிறது.
கடற்கரையோர மீனவ கிராமங்களில் மீன்பிடிப்பிற்காக அதிகளவு வெளியிடங்களுக்கு செல்கின்றனர். மற்றும் வெளிநாடுகளிலும் வேலை பார்க்கின்றனர். இந்நிலையில் குடும்ப தலைவர்களின் பெயர்கள் பெருவாரியான ரேஷன் கார்டுகளில் நீக்கப்பட்டுள்ளது. நுாற்றுக்கணக்கானோர் பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கான முறையான திட்டமிடுதலை வகுத்து அறிவிப்பு வெளியிட வேண்டும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

