/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமங்களில் அகலமில்லாத கண்மாய்க்கரை ரோடு
/
கிராமங்களில் அகலமில்லாத கண்மாய்க்கரை ரோடு
ADDED : ஜூலை 28, 2025 05:28 AM

திருவாடானை :  திருவாடானையில் பல்வேறு கிராமப்புறங்கள் வழியாக செல்லும் கண்மாய் கரை ரோடுகள் போதிய அகலம் இல்லாமலும், தடுப்பு சுவர் இல்லாமலும் உள்ளதால்  வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
திருவாடானை அருகே கல்லுார், இளமணி, தினைகாத்தான்வயல் போன்ற பல கிராமங்களில் உள்ள கண்மாய்கரை ரோடுகள் போதிய அகலம் இல்லாமல், தடுப்பு சுவரும் இல்லாமல் உள்ளதால் இந்த வழியாக செல்லும் கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்கள் எதிரும் புதிருமாக எளிதில் செல்ல முடியாமல் விபத்து அபாயம் காணப்படுகிறது.
குறிப்பாக கல்லுார் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்  சிரமம் அடைந்துள்ளனர்.
மேலும் இந்த ரோடுகள் சேதமடைந்து கற்கள் பெயர்ந்துள்ளது. போதிய அகலம் இல்லாமல் குறுகியதாக காணப்படுகிறது.
கண்மாய்கரையாக இருப்பதால் தடுப்பு சுவர்களும் இல்லை. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

