தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்து கிடக்கும் பெயர் பலகை
தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்து கிடக்கும் பெயர் பலகை
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 03:34 PM

திருவாடானை: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த கிராமங்களின் பெயர் பலகைகள் பலத்த காற்றில் கீழே விழுந்து கிடப்பதால் அவைளை சீரமைக்க வேண்டும். திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, திருவாடானை வழியாக செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பிசியாக இயங்ககூடிய முக்கிய சாலை. தினமும் பல ஆயிரம் பஸ்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றுக்கு நெடுஞ்சாலையோரம் உள்ளன.
முக்கிய கிராமங்களின் பெயர்கள் மற்றும் வழித்தடங்களை காட்டும் பெயர் பலகைகள் பல இடங்களில் சரிந்து கீழே விழுந்துள்ளன. சாலையோர பள்ளங்களிலும் முட்புதர்களிலும் விழுந்து கிடக்கும் இப்பலகைகளால் பயணிகள் அடையாளம் காண முடியாமல் திணறி வருகின்றனர். எனவே இந்த பெயர் பலகைகளை பலமாக நட்டு சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
