/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு
/
தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு
தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு
தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 20, 2025 07:05 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் மீனவர்கள் இணைவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பாம்பன் அக்காள்மடத்தில் உள்ள மீன்துறை அலுவலகத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இத்தளத்தில் மீனவர்கள் இணைவது குறித்தும், இதன் மூலம் மீன் வளர்ப்பு காப்பீடு ஊக்கத்தொகை, மீன் வளர்ப்பு கடனுக்கான மானியங்கள், கூட்டுறவு சங்கங்கள் கடன் மற்றும் ஊக்கத்தொகை, மீன்களை சந்தைப்படுத்துதல், மீன்களின் தர உத்திரவாத முயற்சிகள் குறித்து மீனவர்களுக்கு உடனுக்குடன் தகவல் பெற்று பயனடைய முடியும் என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் சென்னை மீன் ஆராய்ச்சி விஞ்ஞானி தர்மர், மீன்துறை அதிகாரிகள் பிரவீன், ஜெயபிரகாஷ் மற்றும் பாம்பன் மீன்துறை ஆய்வாளர் சங்கர் உட்பட மீனவர்கள் பலர் பங்கேற்றனர்.