/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அஞ்சலகத்தில் தேசியக்கொடி ரூ.25க்கு விற்பனை
/
அஞ்சலகத்தில் தேசியக்கொடி ரூ.25க்கு விற்பனை
ADDED : ஆக 12, 2025 03:44 AM
ராமநாதபுரம்: சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசின் 'ஹர் கர் திரங்கா 4.0'(இல்லந்தோறும் தேசியக்கொடி) என்ற சிறப்பு ஏற்பாட்டில்அஞ்சலகங்களில் தேசியக்கொடி ரூ.25க்கு விற்கப்படுகிறது.
நாட்டின் 79வது சுதந்திர தின விழா ஆக.,15ல் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கொடியேற்ற ஊக்கப்படுத்தும் விதமாகஅனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி ரூ.25க்கு விற்பனைதுவங்கியுள்ளது.
தேசியக் கொடியை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்க மத்திய, மாநில அரசுஅலுவலகத்தினர், பள்ளி, கல்லுாரி, பொதுமக்கள், நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்புகொள்ளலாம் மேலும், www.epos toffice.gov.in என்ற வலைதளத்திலும் ஆர்டர் செய்து ஆன்-லைனிலும் வாங்கலாம்.