/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை இல்லை
/
தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை இல்லை
ADDED : ஜன 24, 2025 04:23 AM
திருவாடானை: குடியரசு தின விழா ஜன.26 ல் நடைபெற உள்ளது. இதற்காக அனைவருக்கும் தேசியக் கொடி கிடைக்கும் வகையில் தபால் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் திருவாடானை உள்ளிட்ட கிராமப் புற தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு தேசிய கொடி அனுப்பவில்லை.
திருவாடானை மக்கள் கூறியதாவது: சுதந்திர தினத்தையொட்டி தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்பட்டது. ஒரு கொடி ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டதால் ஆர்வமாக சென்று கொடி வாங்கி ஏற்றினோம். ஆனால் குடியரசு தின விழாவிற்கு கொடி விற்பனை செய்யவில்லை.
இதனால் தனியார் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். தபால் அலுவலர்கள் கூறுகையில், மூன்று கொடி மட்டுமே அலுவலகத்திற்கு ஏற்றுவதற்காக வந்துள்ளது. விற்பனைக்கு சப்ளை இல்லை என்றனர்.

