/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய கைத்தறி தினம் கொண்டாட்டம்; கல்லுாரியில் விழிப்புணர்வு கண்காட்சி

ADDED : ஆக 06, 2025 02:47 AM
ராமநாதபுரம்: நாளை (ஆக.,7) தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் ( ஆக.6, 7) கீழக்கரையில் உள்ள தாசீம்பீவி மகளிர் கலைக் கல்லுாரியில் விழிப்புணர்வு கண்காட்சி நடக்கிறது.
நாளை (ஆக.,7 ல்) எமனேஸ்வரத்தில் சிறப்பு மருத்துவ முகாம், நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-வது தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் விதமாக பரமக்குடியில் நாளை (ஆக.,7ல்) எமனஸ்வரம் சவுராஷ்ட்டிரா பேரவை அரங்கத்தில் மருத்துவ முகாம் மற்றும் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
மேலும் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பரமக்குடி -எமனேஸ்வரம் பகுதியில் பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து, பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், சித்த மருத்துவம், ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
கல்லுாரி மாணவிகளிடையே கைத்தறி ஜவுளி ரகங்கள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைத்தறி ரகங்கள் அடங்கிய கண்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்றும், நாளையும் ( ஆக.6.7ல்) கீழக்கரையில் உள்ள தாசீம்பீவி மகளிர் கலைக் கல்லுாரியில் நடக்கிறது என கைத்தறி உதவி இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.