/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு சட்டக் கல்லுாரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்
/
அரசு சட்டக் கல்லுாரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்
அரசு சட்டக் கல்லுாரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்
அரசு சட்டக் கல்லுாரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்
ADDED : செப் 30, 2025 03:59 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சியில் உள்ள ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லுாரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
'இந்தியாவில் தேர்தல் ஜனநாயகம்' சிக்கல்கள் மற்றும் சவால்கள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் பாஸ்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார். அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால் தலைமை வகித்தார்.
உதவி பேராசிரியர்களான விஜிப்பிரியா, முத்துக்குமார், குபேந்திரன், அன்பரசி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா கவுரவ விரிவுரையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் சட்டக் கல்லுாரி மாணவர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாடினர்.
ஒன்று முதல் மூன்று அமர்வுகளாக கருத்தரங்கம் நடந்தது.
சிறப்பு தாசில்தார் (தேர்தல்) ஸ்ரீதர் மாணிக்கம், கோபிசெட்டிபாளையம் அரசியல் அறிவியல் துறை இணை பேராசிரியர் சரவணகுமார், வழக்கறிஞர் மும்தாசுதின், மத்திய அரசு வழக்கறிஞர் சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
ஏற்பாடுகளை அரசு சட்டக் கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.