/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்லுாரியில் தேசிய கணித நாள் விழா
/
கல்லுாரியில் தேசிய கணித நாள் விழா
ADDED : ஜன 12, 2025 05:12 AM
கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் இன்ஜினியரிங் கல்லுாரி, தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப கழகம் இணைந்து நடத்திய தேசிய கணித நாள் விழா கல்லுாரியில் நடந்தது.
முதல்வர் நிர்மல் கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழக உறுப்பினர் செயலர் வின்சென்ட் பேசியதாவது:
மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் கடினமாக இருக்கும் என நினைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க தயங்குகிறார்கள். இந்த பழக்கத்தை மாற்ற வேண்டும்.
கணித மேதையான ராமானுஜம் நமது நாட்டிற்கு மட்டுமில்லாமல் உலகத்திற்கு கணிதத்தை கற்றுத் தந்தவர் என்றார்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரிகளின் மாணவர்கள் கணிதம் தொடர்பான படைப்பு மாதிரிகளை காட்சிப்படுத்தினர். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
செய்யது ஹமிதா கலைக் கல்லுாரி முதல்வர் ராஜசேகர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜேஸ்வரன், பேராசிரியர் கணேசன் பங்கேற்றனர்.