/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விநியோக சந்தைப்படுத்துதல் குறித்த தேசிய கருத்தரங்கம்
/
விநியோக சந்தைப்படுத்துதல் குறித்த தேசிய கருத்தரங்கம்
விநியோக சந்தைப்படுத்துதல் குறித்த தேசிய கருத்தரங்கம்
விநியோக சந்தைப்படுத்துதல் குறித்த தேசிய கருத்தரங்கம்
ADDED : செப் 04, 2025 11:26 PM
கீழக்கரை:கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லுாரியில் விநியோக தளவாடங்கள் சந்தைப்படுத்துதல் மேலாண்மை குறித்த தேசிய கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலை பேராசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். சென்னை கேலக்ஸி இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் லாஜிஸ்டிக் முதல்வர் சீனி முகம்மது பங்கேற்று பேசினார்.
கருத்தரங்கில் 15க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கல்லுாரி மேலாண்மை துறை பேராசிரியர் சதாம் உசேன் வரவேற்றார். பேராசிரியர் பார்த்திபமணி மதுரை அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர் பாலாஜி விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பேராசிரியர் அப்ரா சர்ஜனா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை துறைத் தலைவர் அஜ்மல் கான் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.