/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய விளையாட்டு தின கருத்தரங்கம்
/
தேசிய விளையாட்டு தின கருத்தரங்கம்
ADDED : ஆக 23, 2025 04:32 AM
பரமக்குடி : பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, நுகர்வோர் பாதுகாப்பு கழகம் இணைந்து தேசிய விளையாட்டு தினத்தையொட்டி துரித உணவுகளால் ஏற்படும் தீங்குகள் பற்றிய கருத்தரங்கு நடந்தது.
கல்விக் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தாளாளர் ரெங்கன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் தனசேகரன் வரவேற்றார். பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழக செயலாளர் புரோஸ்கான், துணைத் தலைவர் சேகர் வாழ்த்தினர். உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முத்துச்சாமி, வெண்ணிலா பேசினர்.
அப்போது துரித உணவுகளால் ஏற்படக் கூடிய தீமைகள் மற்றும் உடல் பருமன் ஏற்படுவது சார்ந்த பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர் துளசிராமன் நன்றி கூறினார்.