ADDED : ஜன 26, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வருவாய்த்துறை சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, பள்ளியில் பேச்சு போட்டி ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம், தாசில்தார் வரதராஜன் பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக மாணவர்களின் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இதில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும், மாணவர்களும் கோஷங்கள் எழுப்பினர். வருவாய்த் துறையினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

