ADDED : ஜன 24, 2026 06:47 AM

அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடியில் 16வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் அரசு கல்லுாரியில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பரமக்குடி ஓட்டபாலம் அருகில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் துவக்கி வைத்தார். தாசில்தார் வரதன் வரவேற்றார். பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் ஊர்வலம் ஐந்து முனை, ஆர்ச், பெரிய பஜார், ஆற்று பாலம் வழியாக தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. பின்னர் பரமக்குடி அரசு கலைக்கல்லுாரியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முதல்வர் ராஜா வாழ்த்தினார். துணை தாசில்தார் (தேர்தல்) மஞ்சுளா நன்றி கூறினார்.
