/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்த பறவைகள் படங்களை புதுப்பிக்க இயற்கை ஆர்வலர் கோரிக்கை
/
சேதமடைந்த பறவைகள் படங்களை புதுப்பிக்க இயற்கை ஆர்வலர் கோரிக்கை
சேதமடைந்த பறவைகள் படங்களை புதுப்பிக்க இயற்கை ஆர்வலர் கோரிக்கை
சேதமடைந்த பறவைகள் படங்களை புதுப்பிக்க இயற்கை ஆர்வலர் கோரிக்கை
ADDED : பிப் 16, 2024 04:53 AM
சாயல்குடி: -சாயல்குடி அருகே மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார் கண்மாய் பறவைகள் சரணாலயங்களில் சேதமடைந்த பறவைகள் படங்களை புதுப்பிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கீழக்கரை, சாயல்குடி வனச்சரக அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள சரணாலயத்தில் பறவைகள் குறித்த அழகிய வண்ண உருவப்படங்கள் வரையப்பட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் முன்பு நடவடிக்கை இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயம் குறித்த வழிகாட்டி விபர பலகையில் பறவைகளின் படங்கள் பொலிவிழந்து காணப்படுகிறது. இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்தில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவை இனங்கள் வருகின்றன. பருவ மழைக் காலம் முடிந்தவுடன் முட்டையிட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப குஞ்சு பொரித்தவுடன் அவற்றை உடன் அழைத்துச் செல்வது வழக்கம்.
தற்போது பறவைகள் சீசன் துவங்கி உள்ளதால் அது குறித்த அழகிய பறவை இனங்களின் படங்களை ஓவியர்கள் மூலம் முன்பு வரைந்து காட்சிப்படுத்தினர். தற்போது அதற்கான நடவடிக்கை ஏதும் இல்லாததால் கீழச்செல்வனுார் மற்றும் மேலச்செல்வனுார் பகுதிகளில் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய வழிகாட்டி விபர பலகைகளில் உள்ள படங்கள் பொலிவிழந்து சேதமடைந்துள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நிதி ஒதுக்கி ஓவியர்களின் மூலம் மீண்டும் பறவைகளின் புகைப்படங்களை வரைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகும் என்றனர்.