/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் நாட்டியாஞ்சலி விழா; ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர்

ADDED : அக் 02, 2025 10:35 PM

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை முதல் இரவு வரை நாட்டி யாஞ்சலி விழா நடந்தது.
அவதானம் ரேவதி ராஜு ஒடிசி நடனம், சித்தார்த் கே.எஸ்.ராஜன் இந்துஸ்தானி வாய்ப்பாட்டு மற்றும் கிரிஜா ஸ்ரீதர் குழுவினரின் பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 1 முதல் 9 நாட்கள் நவராத்திரியின் சிறப்பம்சங்கள் புராணத் தொகுப்பாக ஒடிசி நடனத்தின் மூலம் விளக்கப்பட்டது.
கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தலைமை வகித்தார். வருமான வரித்துறை இணை ஆணையர் அன்ஷு ஷராவத் முன்னிலை வகித்தார். தெற்கு ரயில்வே துணை தலைமை பணியாளர் அலுவலர் சித்தார்த் எஸ்.கே.ராஜ் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (ஓய்வு) மதுரை கனகராஜ், சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாடினர்.